10,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸார் கைது!
10,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைத் இலஞ்ச,ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாரம்மல பகுதியில் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இலஞ்சம் பெற்ற பொலிஸார்
முறைப்பாட்டாளரின் வீட்டை சோதனை செய்து, சட்டவிரோத கசிப்பு கைப்பற்றப்பட்ட நிலையில், அது தொடர்பில் சட்ட நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக இந்த இரு பொலிஸாரும் இலஞ்சம் பெற்றமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

நேற்று (16-01-2024) மாலை 6.40 மணியளவில் நாரம்மல பகுதியில் உள்ள முறைப்பாட்டாளரின் வீட்டில் வைத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதனையடுத்து சந்தேகநபர்கள் குருணாகல் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
புதியது பழையவை