அகில இலங்கை சமாதான நீதிவானாக - ம.கோபிநாத் சத்தியப்பிரமாணம்



ம.கோபிநாத் அகில இலங்கை சமாதான நீதிவானாக சத்தியப்பிரமாணம்.

நேற்று (16-01-2024) ஆம் திகதி  மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் அகில இலங்கை சமாதான நீதிவானாக கோவில் போரதீவு ம.கோபிநாத் சத்தியப்பிரமாணம்.

போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் பிரிவு கோவில் போரதீவைச்சேர்ந்த இவர், கோவில் போரதீவு ஸ்ரீ கண்ணகியம்மன் ஆலயம் மற்றும் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி தேவஸ்தான குடிசார் பாகைமுகாமையாளரும், கோவில் போரதீவு இளைஞர் எழுச்சி ஒன்றிய கலை விளையாட்டு கழகத்தின் ஆலோசகரும் உறுப்பினரும் முன்னாள் உப தலைவரும், செயலாளரும், சக்கரவத்தி நற்பணி மன்றத்தின்( பிரான்ஸ் )போரதீவு பற்று இணைப்பாளரும், கோவில் போரதீவு மேற்கு கிராம அபிவிருத்தி சங்க முன்னாள் செயலாளரும், உறுப்பினரும், உதயதாரகை கலை விளையாட்டு கழக ஆலோசகரும் ஆவார்.

பிரபல இளம் வர்த்தகரும்,சமூக சேவையாளரும் ஆன மகேஸ்பரன் கோபிநாத் இலங்கைத் தீவு முழுவதுக்குமான சமாதான நீதிவான் என்பது குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை