கடலில் நீராடச் சென்ற 15 பேரில் ஒருவர் மாயம்!
முல்லைத்தீவு மாத்தளன் கடலில் நீராட சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 33 வயதுடைய இராசதுரை கஸ்தூரன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாத்தளன் கடல் ஒரு ஆபத்தான கடலாக காணப்படும் நிலையில் அங்கு 15 பேர் வரை நீராட சென்றுள்ளனர்.

அவர்களுக்கு அந்த பிரதேசத்தில் நீராட வேண்டாம் என குறித்த பகுதி மீனவர்களால் அறிவுறுத்தப்பட்டது.
எனினும் அவர்கள் அங்கு நீராடியுள்ளனர்.

இதன்போது ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.
இவ்வாறு காணாமல் போனவர் எங்கோ ஒரு கடற்கரை பகுதியில் ஒதுங்கும் போதுதான் உடலத்தினை மீட்கலாம் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை