வடக்கு கிழக்கின் 18 தமிழ் பாராளமன்ற உறுப்பினர்களில் 4 பேர் நேற்று "நிகழ்நிலை " சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து இருக்கின்றார்கள்


வடக்கு கிழக்கின் 18 தமிழ் பாராளமன்ற உறுப்பினர்களில் 4 பேர் நேற்று "நிகழ்நிலை " சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து இருக்கின்றார்கள் 

அதாவது பாராளமன்ற உறுப்பினர்கள்  டக்லஸ் தேவானந்தா , திலீபன், பிள்ளையான் மற்றும் வியாழேந்திரன் ஆகியோர் நேற்று "நிகழ்நிலை " சட்டத்தை ஆதரித்து இருக்கின்றார்கள்  

குறிப்பாக சிவில் அமைப்புகள் மட்டக்களப்பில் வியாழேந்திரன் மற்றும் பிள்ளையானை நேரில் சந்தித்து  "நிகழ்நிலை " சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டாம் என விண்ணப்பித்தும்  ஆதரவாக வாக்களித்து இருக்கின்றார்கள் 

அரசியலுக்கு அப்பால் சாதாரண இணைய பதிவுகளுக்காக சமூக தள வாசிகளை  குற்றவாளியாக்கும் சட்ட வரைவிற்கு தமிழ் பாராளமன்ற உறுப்பினர்களே  துணை போனமையை நியாயப்படுத்த முடியாது.

வடக்கு கிழக்கு பிராந்தியத்தின்  அபிவிருத்தி பற்றி பேசுவதாக சொல்லும் இந்த பாராளமன்ற உறுப்பினர்கள் முதலீடு மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு ஆபத்தானதாக இருக்கும்  சட்ட வரைவிற்கு எப்படி ஆதரவாக வாக்களித்தார்கள் ?

பொதுவெளியில் கிரிமினல் பிண்னியுள்ளவர்களாக  இருக்கின்ற போதும் குறிப்பிட்ட எண்ணிக்கையான மக்களை பிரதிநித்துவம் செய்யும் இவர்கள்   தங்களுக்கு வாக்களித்த மக்களுக்காவது நேர்மையாக  நடக்க வேண்டும்.

"நிகழ்நிலை " சட்டத்திற்கு மாத்திரமின்றி வற் வரி 18 % அதிகரிப்புக்கு ஆதரவாகவும்  வாக்களிக்கின்றார்கள் 

பாதுகாப்பு அமைச்சின் மீதான நிதி ஒதுக்கீடுக்கும் ஆதரவாக கை உயர்த்துகின்றார்கள் 

தொல்லியல் திணைக்களத்தின் மீதான நிதி ஒதுக்கீட்டுக்கும் ஆதரவளிக்கின்றார்கள் 

இலங்கைத்  தீவின் பொருளாதாரத்தை  சீரழித்த ராஜபக்சே ஆட்சியாளர்களின்  20 ஆம் திருத்த சட்டதிற்கும் ஆதரவாக இவர்கள் வாக்களித்து  இருக்கின்றார்கள்  

இது போதாதென்று ரூபா 600 பில்லியன் வருமான இழப்பை ஏற்படுத்திய  கோட்டாபய ராஜபக்சேவின் வரி சீரமைப்புக்கும் இவர்கள் கை தூக்கி இருக்கின்றார்கள் 

இதன் தொடர்ச்சியாக எதிர்வரும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கும் ஆதரவாக வாக்களிப்பார்கள் 

அபிவிருத்தி அரசியல் என்பதற்கு ஆழமான புரிதலும் செயற்பாடும் தேவை. 

அரச வேலை பெற்றுக் கொடுத்தல் 

மின்சார இணைப்பு பெற்றுத் தருதல்

வீட்டுத் திட்டத்திற்கு சிபாரிசு செய்தல் 

உள்ளுராட்சி நிறுவனங்களின் வீதிகளுக்கு கல்லு பறித்தல் என்பன அபிவிருத்தி அரசியல் அல்ல. 

உண்மையில் மேலே குறிப்பிட்ட பொது நிர்வாக செயல்முறைகளில் பங்கெடுப்பதும் சிபாரிசுகள் செய்வதும் நல்லாட்சி (Good Governance) நடைமுறையில் குற்றங்களாக அடையாளம் காணப்பட்டு இருக்கின்றன 

நிலைத்தகு அபிவிருத்தி பற்றி புரிதலலின்றி ராஜபக்சே சகோதரர்களின் விருப்புக்காக அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே அவர்களின் கண் அசைவுக்கு இயங்குவது அபிவிருத்தியும் அல்ல அரசியலும் அல்ல
புதியது பழையவை