நீராடிக் கொண்டிருந்த 9 வயது சிறுவனை இழுத்துச்சென்ற முதலை



களனி கங்கையில் நீராடிக் கொண்டிருந்த ஒன்பது வயதுச் சிறுவனை முதலை ஒன்று இழுத்துச்சென்றுள்ளதாக கடுவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் கடுவெல வெலிவிட்ட, புனித அந்தோனி மாவத்தையில் வசிக்கும் டிஸ்னா பெரேரா என்ற 9 வயது சிறுவனே இந்தச் சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.




குளிப்பதற்கு சென்றபோது துயரம்
சிறுவன் தனது பாட்டியுடன் குறித்த இடத்துக்கு குளிப்பதற்கு சென்றபோதே இந்த துயரம்  ஏற்பட்டுள்ளது.

பாட்டி சிறுவனை நீராட்டிக் கொண்டிருந்தபோது பாட்டியை திடீரென முதலை ஒன்று தாக்கி விட்டு சிறுவனைக் இழுத்துச் சென்றுள்ளது.

சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், சிறுவன் முதலையின் வாயில் சிக்கிக் கொண்டிருந்ததனை தாம் கண்டதாக தெரிவித்ததுடன், சிறுவனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புதியது பழையவை