மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்து!மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட மணப்பிட்டி தாண்டியடி பிரதான சாலையில் இன்று (08-01-2024)ஆம் திகதி காலை பாடசாலைமாணவர்களை ஏற்றிக்கொண்டு பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி மணப்பிட்டிச் சந்திக்கு அருகாமையில் வைத்து விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியில் பயணித்த மட்/மமே /அரசடித்தீவு விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தினை சேர்ந்த 2 மாணவர்கள் மற்றும் முச்சக்கர வண்டியை செலுத்திய சாரதி ஆகியோர் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


புதியது பழையவை