பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் புதிய நிர்வாகம்




யாழ் - பல்கலைக்கழகத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான மாணவர் ஒன்றியத்தின் தலைவராக கே.துவாரகன் (முகாமைத்துவ பீடம் ) தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

உறுப்பினர்கள் தெரிவு நடைபெற்றதை தொடர்ந்து பழைய நிர்வாகத்திடமிருந்து நேற்றைய தினம் (01.01.2024) பொறுப்புகள் புதிய நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.



அந்த வகையில், யாழ்,பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளராக கலைப் பீடத்திலிருந்து சிந்துஜன், பொருளாளராக விஞ்ஞான பீடத்திலிருந்து கிந்துஜன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, உப தலைவராக மருத்துவ பீடத்தை சேர்ந்த y.மயூரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


உறுப்பினர்கள் விபரம் 
குறித்த ஒன்றியத்தின் உறுப்பினர்களாக விவசாய பீடத்தின் தலைவர் E.ஜனகானந்தனும், கலைப்பீடத்தின் தலைவர் Y.நெவிக்குமாரும், சுகாதார அறிவியல் பீடத்தின் தலைவர் T.நிவிக்சனும், பொறியியலாளர் பீடத்தின் தலைவர் D.S.D குமாரவும், மருத்துவ பீடத்தின் தலைவர் E.ஜெய் விதுசனும் , இந்து ஆய்வு பீடத்தின் தலைவர் N.ஜோதீசும் , தொழில்நுட்ப பீடத்தின் தலைவர் S.ஐங்கரனும் , மேலாண்மை ஆய்வுகள் மற்றும் வணிகவியல் பீடத்தின் தலைவர் S.சிவரதனும், விஞ்ஞான பீடத்தின் தலைவர் விதுசனும் , சேர் பொன்னம்பலம் ராமநாதன் நிகழ்ச்சி மற்றும் காட்சி கலை பீடத்தின் தலைவர் R.ஹர்சனும் இணைக்கப்பட்டுள்ளனர்.
புதியது பழையவை