கிழக்கு மாகாணத்தின் பிரபல குழந்தை நல மருத்துவ நிபுணர் டாக்டர் திருமதி விஜி திருக்குமார் பேராசிரியராக பதவி உயர்வு!



கிழக்கு மாகாணத்தின் பிரபல குழந்தை நல மருத்துவ நிபுணர் டாக்டர் திருமதி விஜி திருக்குமார் பேராசிரியராக பதவி உயர்வுபெற்றுள்ளார்.

கிழக்கில் குழந்தை நல மருத்துவ நிபுணர்களில் முதன்முறையாக டாக்டர் திருமதி விஜி திருக்குமார் பேராசிரியராக பதவி உயர்வுபெற்றுள்ளதுடன் இலங்கையில் தற்போது கடமையாற்றும் குழந்தை நல மருத்துவ நிபுணர்களில் பேராசிரியராக பதவி உயர்வுபெற்ற இரண்டாவது தமிழராக இவர் கருதப்படுகின்றார்.


அம்பாறை காரைதீவினை பிறப்பிடமாக கொண்ட இவர் தனது கல்வியை காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியிலும் மருத்துவத்துறையினை யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்திலும் பூர்த்திசெய்திருந்தார்.

முதல் மருத்துவ நியமனமாக கண்டி போதனா வைத்தியசாலையில் கடமையாற்றியதுடன் 2010ஆம் ஆண்டு குழந்தைநல மருத்துவ நிபுணராக கல்முனை ஆதார வைத்தியசாலையில் நியமனம்பெற்றார்.




2012ஆம் ஆண்டு தொடக்கம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவ நிபுணராக கடமையாற்றிவருவதுடன் கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளராக 2017ஆம் ஆண்டு தொடக்கம் கடமையாற்றிவருவதுடன் இன்று தொடக்கம் பேராசிரியராக கடமைமைகளை ஏற்றுள்ளார்.

30வருடத்திற்கு பின்னர் தமிழ் பெண் குழந்தை நல வைத்திய நிபுணர் ஒருவர் பேராசிரியராக பதவி உயர்வுபெற்றுள்ளார்.

இவர் மகப்பேற்று வைத்திய நிபுணரும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் மகப்பேற்றியல்துறை பேராசிரியர் டாக்டர் மார்க்கண்டு திருக்குமாரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை