இந்தியாவின் தமிழகத்தில் தமிழ் எழுத்துக்களை கொண்டு உருவாக்கப்பட்ட சிலை ஒன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இச்சிலையானது தொலைக்காணொளி தொழில் நுட்பத்தின் மூலம் கடந்த வெள்ளிக்கிழமை (05-01-2024) திறக்கப்பட்டுள்ளது.
25 அடி உயரம்
குறித்த சிலை முழுவதும் தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு, சிலையின் நெற்றிப் பகுதியில் அறம் என்ற சொல் பொறிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிலையானது 3 தொன் எடையில் 25 அடி உயரம் கொண்டதாக உருக்கு இரும்பினால் அமையப் பெற்றுள்ளது.
ஸ்மார்ட் சிற்றி திட்டத்தின் கீழ் இந்திய மதிப்பில் 52 கோடி ரூபா செலவில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.