ஞா.ஸ்ரீநேசன், பொதுச் செயலாளர் பதவிக்கு முன்மொழிவேன் - முன்னாள் எம்.பி.அரியநேந்திரன் அறிவிப்பு!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி, மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்கப்பட்டால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
ஞா.ஸ்ரீநேசனை அப் பதவிக்கு பிரேரிக்கவுள்ளதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு கிளைக் கூட்டம் இன்று இடம்பெற்ற நிலையில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு
குறிப்பிட்டார்.தமிழரசுக் கட்சியின் உட்பூசல்கள் தொடர்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீசேனிடம் ஊடகவியலாளர்கள் வினவினர்


இதேவேளை தமிழரசுக் கட்சியின் செயலாளர் பதவி தொடர்பில், மட்டக்களப்பு மாவட்டக் கிளை இறுதி முடிவுகள் எதனையும் எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டார்.
புதியது பழையவை