மட்டக்களப்பு வேத்துச்சேனை கிராமத்திற்கு - லண்டன் வோள்தஸ்ரோ கற்பக விநாயகர் ஆலயத்தின் அனுசரணையில் நிவாரணம்

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று வேத்துச்சேனை கிராமத்தில் வெள்ள அனர்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, லண்டன் வோள்தஸ்ரோ கற்பக விநாயகர் ஆலயத்தின்
அனுசரணையில் அகிலன் பவுண்டேசனால் இன்று(07-01-2024) உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.போரதீவுப்பற்று பிரதேசசெயலாளர் சோ.ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இலங்கைக்கான அகிலன் பவுன்டேசன் இணைப்பாளர் வி.ஆர்.மகேந்திரன்,
கிராமஉத்தியோகத்தர்,சமூர்த்தி உத்தியோகத்தர், பொருளாதார உத்தியோகஸ்தர் கலந்து கொண்டு இதனை வழங்கிவைத்தனர்.

128 குடும்பங்களுக்கு இந்த உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.புதியது பழையவை