மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில், அடையாளங்காணப்படாது நீண்ட நாட்களாக வைக்கப்பட்டிருந்த நான்கு சடலங்கள் அடக்கம்


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில், அடையாளங்காணப்படாது நீண்ட நாட்களாக வைக்கப்பட்டிருந்த நான்கு சடலங்கள் நேற்று அடக்கம்


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின், பிரேத அறையில் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக, அடையாளங்காணப்படாத நிலையில், பேணப்பட்டு வந்த
நான்கு சடலங்கள் நேற்று அடக்கம் செய்யப்பட்டன.

மட்டக்களப்பு மாநகர சபைக்குச் சொந்தமான கள்ளியங்காடு இந்து மயானத்தில்
சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டன.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதியின் பணிப்புரைக்கு அமைய, பிரேத பரிசோதனையின் பின் அரச நிதியில், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி
பிரியந்த பண்டார ஆலோசனையின் பிரகாரம், மட்டக்களப்பு பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் உத்தியோகத்தர் அன்புராஜின் வழிகாட்டலில்,


புளியந்தீவு கிராம சேவையாளர் உத்தியோகத்தர் எஸ் சதீஸ்வரன் தலைமையில் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.
புதியது பழையவை