இலங்கை மின்சார சபை ஊழியர்கள் போராட்டம் - இருளில் மூழ்கும் அபாயம்!





மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான உத்தேச சட்டமூலத்திற்கு எதிராக நாளை (03-01-2024) முதல் மூன்று நாட்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான சட்டமூலத்தை உடனடியாக மீளப் பெறுமாறு மின்சக்தி அமைச்சருக்கு அறிவிக்கவுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சாரசபையை ஜனாதிபதியுடன் சேர்ந்து மின்சக்தி அமைச்சர் விற்பனை செய்வதற்கு விரும்புவதாகவும், குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தன்னிச்சையாக நிறைவேற்றப்படுமாயின் பாரிய வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக எதிர்வரும் மூன்று நாட்களுக்கு பாரியளவிலான கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்துவதற்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை