ஜனாதிபதி தேர்தலை இந்த(2024) வருடத்தில் நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் பதினெட்டாம் திகதிக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் அதிபர் தேர்தலை ஆணைக்குழு நடத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பட்ஜெட்டில் இருந்து பணம் ஒதுக்கப்பட்டுள்ளது
அதற்குத் தேவையான பணத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையம் விடுத்த கோரிக்கையின்படி, பட்ஜெட்டில் இருந்து பணம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
தேர்தலை நடத்துவதற்கு பத்து பில்லியன் ரூபா செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.