பிரித்தானியாவின் இளவரசி அன்னே இலங்கைக்கு 5 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இளவரசி அன்னே எதிர்வரும் 11 ஆம் திகதியன்று வட மாகாணத்திற்கான விஜயம் செய்யவுள்ளார்.
இதன்போது அவர் பிரித்தானியா அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டு மீள் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட யாழ். பொது நூலகத்தினை பார்வையிடுவதுடன் பிரித்தானியா நூலக கோணரினையும் திறந்து வைக்கவுள்ளார்.
இந்நிலையில், பிரித்தானியாவின் இளவரசியின் மெய் கண்காணிப்பாளர்கள் மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய தூதரக்குழுவினர்கள் இன்று (09) மதியம் யாழ்ப்பாணம் பொதுநூலகத்திற்கு வந்ததுள்ளனர்.
அத்துடன் எதிர்வரும் 11ஆம் திகதி இடம்பெறவுள்ள நிகழ்வு தொடர்பான ஏற்பாடுகள், வரவேற்பு ஒழுங்குகள், பாதுகாப்பு நடைமுறைகள், கண்காணிப்பாளர்களின் செயற்பாடுகள் கலந்துகொள்ளுவர்களுக்கான ஒழுங்குகள் குறித்து ஆராயப்பட்டன.
மேலும் இந்த கலந்துரையாடலில் யாழ். மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன், இலங்கைக்கான பிரித்தானிய தூதர ஆலோசகர் கஜயனி பொன்னம்பலம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.