பரிதாப நிலையிலிருந்து தமிழரசுக் கட்சி மீள வேண்டும் - கோ.கருணாகரம் எம்.பி பிரார்த்தனை!




இலங்கைத் தமிழரசுக் கட்சி தனது மோசமான நிலைமையில் இருந்து மீள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்
கோவிந்தம் கருணாகரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே குறிப்பிட்டார்.


மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலையின் 37 வது ஆண்டு நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

மகிழடித்தீவு சந்தியில் உள்ள படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபியில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.

ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் உயிர்நீர்த்தவர்களின் ஆத்மசாந்திவேண்டி அகவணக்கமும்
செலுத்தப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரன், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்ணம், முன்னாள் மாநகர சபை பிரதி முதல்வர் சத்யசீலன்,
கொக்கட்டிச்சோலை பகுதி மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

28-01-1987 மற்றும் 12-06-1991ஆகிய காலப்பகுதிகளில் இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் மகிழடித்தீவு இறால்பண்ணை மற்றும் கொக்கட்டிச்சோலை
ஆகிய பகுதிகளில் 239பேர் படுகொலைசெய்யப்பட்டனர்.

படுகொலையில், சிறுவர்கள்,பெண்கள் மற்றும் முதியவர்களும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை