யாழில் ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தில் சட்டத்தரணி கைது!ஜனாதிபதியின் யாழ்.வருகையை எதிர்த்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்.பழைய பூங்கா வீதிக்கு எதிராக இன்று (04-01-2024) போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் சட்ட ஆலோசகர் கனகரத்தினம் சுகாஷ், உறுப்பினர்களாகிய பொன்மாஸ்டர், அருண்மதி, ஜெகன், பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை வீதி தடைகளை அமைத்து பொலிஸார் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தி வருவதோடு அவர்களை தடுத்து வைத்துள்ளனர்.மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ் விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ் மாவட்ட செயலகத்துக்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


புதியது பழையவை