தமிழரசுக் கட்சி பொதுச் செயலாளர் பதவி தெரிவில் மீண்டும் குழப்பம்
இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவுக்காக கட்சியின் மத்திய குழு கூட்டம் இடம்பெற்ற போது பொதுச் செயலாளர் தெரிவில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய குகதாசன், மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய சிறிநேசன் ஆகியோர் பொதுச்செயலாளர் பதவிக்காக போட்டியிட தீர்மானிக்கப்பட்டது.

இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சியில் தலைமைத்துவத்தில் போட்டியிட்ட சட்டதரணி ஒருவரும் இதில் போட்டியிட முற்பட்ட போது அதில் குழப்பங்களை தவிர்ப்பதற்காக மத்திய குழு குகதாசனின் பெயரை ஏக மனதாக தீர்மானித்தது.

வாக்கெடுப்பிற்கான கலந்துரையாடல்
குறித்த தீர்மானம் பொதுச்சபைக்கு வந்த போது பொதுச்சபை உறுப்பினர்கள் குகதாசனின் பெயரை ஏக மனதாக ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டு வாக்கெடுப்பை கோரியிருந்தது.


இந்நிலையில் வாக்கெடுப்பிற்கான கலந்துரையாடலானது இடம்பெற்று வருகின்றது.
புதியது பழையவை