இலங்கை தமிழரசுக்கட்சியின் செயலாளரா திருகோணமலையை சேர்ந்த குகதாசன் தெரிவு?




இலங்கை தமிழரச கட்சியின் பொதுச் செயலாளராக திருகோணமலை சேர்ந்த குகதாசனை நியமிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இன்று (27-01-2024)காலை திருகோணமலையில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்தக் கூட்டத்தில் பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இது தொடர்பான உத்தியோகபூர்வமான அறிவிப்பு எதுவும் இதுவரையில் வெளியிடப்படாத நிலையில் தொடர்ந்து கூட்டம் நடைபெற்று வருவதுடன் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள கூட்டத்திலேயே இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.


புதியது பழையவை