மட்டக்களப்பு - கல்லடி பகுதியில் பாரிய தீ விபத்து!
மட்டக்களப்பு - கல்லடி பகுதியில் திடீரென பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்தானது, மட்டக்களப்பு - கல்லடி பாலத்தில், உப்போடை வீதி ஆற்றங்கரைக்கு அருகாமையில் நேற்று (25.01.2024) ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, குறித்த தீ பரவலுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை என்பதோடு வீதியில் பயணித்த வாகன சாரதிகள் அச்சத்துடனேயே தமது பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.


பதற்றமான சூழ்நிலை
இவ்வாறு, திடீரென தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளமையால் அப்பகுதி மக்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை ஒன்று உருவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
புதியது பழையவை