பொலன்னறுவை, வெலிக்கந்தை பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் நேற்று (04-01-2024) இரவு காட்டில் மரம் வெட்டிக்கொண்டிருந்த போது யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெலிக்கந்தை பிரதேசத்தினை சேர்ந்த வசந்த பண்டார என்ற 28 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்றுப்பரிசோதனை
இவ்வாறு உயிரிழந்த இளைஞனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.