கல்முனை சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் உயிரிழந்த சிறுவன் - 28 வயதான பெண்ணுக்கு நீதிபதி விடுத்த உத்தரவு!



அம்பாறை, கல்முனை - சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை சந்தேகத்தின் பேரில் கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்து கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.



இதனையடுத்து நேற்று (03-02-2024) வழக்கை விசாரித்த கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 17 ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.


குறித்த வழக்கு விசாரணையின் போது உயிரிழந்த சிறுவனின் தந்தை, சகோதரி ஆகியோர் நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்தனர்.

பின்னர் பொலிஸார் மற்றும் பிரதிவாதியின் சட்டத்தரணி ஆகியோரின் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு 28 வயதுடைய குறித்த பாடசாலையின் மேற்பார்வையாளரான பிறின்ஸி புலேந்திரன் என்பவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை