பரீட்சைத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

க.பொ .த உயர்தர விவசாய விஞ்ஞான பாட பரீட்சையின் முதலாம் மற்றும் இரண்டாம் பகுதி வினாத்தாள்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்நிலையில் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி அந்த பாடத்துக்கான இரண்டு பரீட்சைகளும் இடம்பெறவுள்ளன.

பரீட்சைக்கு முன்னதாகவே வினாத்தாள் வெளியானதன் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி மாதம் முதலாம் திகதி காலை 08.30 முதல் 11.40 வரை விவசாயம் இரண்டாம் பகுதி பரீட்சையும், பிற்பகல் 01 மணி முதல் 3 மணி வரை முதல் பகுதி பரீட்சையும் நடைபெறும்.
புதியது பழையவை