மின்சாரம் தாக்கி ஆசிரியர் ஒருவர் உயிரிழப்பு!
தலவாக்கலை, பாம்ஸ்டன் பிரதேசத்தில் பயிரிடப்பட்ட தோட்டத்தில் பாடசாலை ஆசிரியை ஒருவர் மின்சார கம்பியில் சிக்கி இன்று (16- 01-2024) சடலமாக மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் தலவாக்கலை பாம்ஸ்டன் தமிழ் கல்லூரியில் பாடசாலை ஆசிரியராக கடமையாற்றிய கே. விஸ்வநாதன் (வயது 58) என்ற நபர் எனவும், அதே பகுதியைச் சேர்ந்தவர் எனவும், பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 
குறித்த ஆசிரியை வீட்டுக்கு அருகில் உள்ள மரக்கறி தோட்டம் ஒன்றில் கிடப்பதை கண்ட பிரதேசவாசிகள் மற்றும் உறவினர்கள் அவரை லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 
லிந்துலை பிரதேச வைத்தியசாலையின் பிரதம வைத்திய அதிகாரி திரு. அசேல சுரஞ்சித் கூறுகையில், இவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது அவர் ஏற்கனவே உயிரிழந்து இருந்ததாக தெரிவித்தார்.
 
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை