நாட்டின் இன்றைய வானிலை முன்னறிவிப்பு!





கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்

முல்லைத்தீவு  தொடக்கம் திருகோணமலை, மட்டக்களப்பு  ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள  கடல் பிராந்தியங்களில் இடைக்கிடையே  மழை பெய்யக்கூடும். 

 நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். 

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 km வேகத்தில் வடகிழக்குத்  திசையில்  இருந்து கிழக்குத் திசையை நோக்கி காற்று வீசும். 

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும். 

கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
 சிரேஸ்ட  வானிலை அதிகாரி.
புதியது பழையவை