ஜனாதிபதியுடன் செல்பி எடுத்த கில்மிசா!ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ‘சரிகமப‘ நிகழ்ச்சியின் வெற்றியாளர் கில்மிஷா எடுத்துக் கொண்ட செல்பியானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.


நான்கு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று யாழ்ப்பாணம் சென்றிருந்தார்.

இதன்போது நேற்றிரவு யாழில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜனாதிபதி, கில்மிஷாவை நேரில் அழைத்துப்  பாராட்டினார்.

இதேவேளை ஜனாதிபதியுடன் புகைப்படங்கள்  எடுத்துக்கொண்ட கில்மிஷா, அவர் முன்னிலையில் பாடல்  பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை