தொடருந்துடன் லொறி மோதி விபத்து!
வெலிகந்த தொடருந்து கடவையில் தொடருந்துடன் சிறிய ரக லொறி மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தானது நேற்று(12-01-2024) மட்டக்களப்பிலிருந்து மாஹோ நோக்கிப்பயணித்த தொடருந்துடன் சிறிய ரக லொறியொன்று மோதி இடம்பெற்றுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும், லொறியின் சாரதி காயங்களுடன் வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறு வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை