பௌத்த பிக்கு கொலை - துப்பாக்கிச் சூடு நடத்த பயன்படுத்திய கார் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது
கம்பஹா, மல்வத்து ஹிரிபிட்டியவில் உள்ள விகாரை ஒன்றில் பௌத்த பிக்கு ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாகனம், கடுவெல பிரதேசத்தில் தீயில் எரிந்த நிலையில் நேற்று (23-01-2024) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் தப்பிச் செல்வதற்கு முன்னர் கடுவெல காட்டுப்பகுதிக்கு அருகில் உள்ள வெறிச்சோடிய இடத்தில் காருக்கு தீ வைத்துள்ளனர்.

முன்னதாக, காரில் வந்த அடையாளம் தெரியாத நான்கு நபர்கள், 45 வயதான பௌத்த பிக்கு மீது டி-56 ஆயுதத்தை பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 

சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புதியது பழையவை