மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றுமாலை முதல் பெய்துவரும் கனமழையால், தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
கடந்த சில வாரங்களுக்கு முன்னரும், கனமழை பெய்தமையால், குளங்கள் வான்பாய்ந்தன.
ஏற்கனவே குளங்களின் நீர்மட்டம் உயர்வடைந்து காணப்பட்ட நிலையில், தற்போது பெய்துவரும் கனமழையால், குளங்களுக்கான நீர் வரத்தும்
அதிகரித்துச் செல்கிறது.
இதனால் மேலதிக நீரை வெளியேற்றும் பணிகள் துரித கதியில் முன்னெடுக்கப்படுகின்றன.
பிரதான குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தாழ்நிலங்களில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு
அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.