ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்



ஜப்பானில் இன்று (09-01-2024) மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டரில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமும் மத்திய ஜப்பானிலேயே பதிவாகியுள்ளது.

இதனால் கடந்த 1-ஆம் தேதி எந்தெந்த பகுதிகளிலும் பாதிப்பு உணரப்பட்டதோ அதே பகுதிகளிலேயே மீண்டும் பாதிப்பு உணரப்பட்டுள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

இந்த ஆண்டு தொடக்கத்திலேயே ஏற்பட்ட நிலநடுக்கம் பெரிய சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. அப்போதே அடுத்த சில வாரங்களுக்கு நிலநடுக்க அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறிய நிலையில் இன்று மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இன்றைய நிலநடுக்க சேத விவரங்கள் பற்றிய மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
புதியது பழையவை