மட்டக்களப்பு சிவில் சமூக செயற்பாட்டாளர் லவகுமார் - சிஐடி விசாரணைக்கு அழைப்பு!




குற்றப்புலனாய்வினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளளேன் என மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து சிவில் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் லவக்குமார் தெரிவித்துள்ளார்.

அதன்போது, அவரை இன்றைய தினம் சனிக்கிழமை(27-01-2024) மட்டக்களப்பு சிஐடி யினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, இரண்டு காவல்துறை உத்திகோகஸ்த்தர்களால் நேற்று மாலை சிவில் உடையில் வருகை தந்து எனக்கு அந்த விசாரணைக்குரிய அழைப்புக் கடிதத்தைக் கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.



வெள்ளிக்கிழமை(26-01-2024) காலை 8 மணியளவில் வாழைச்சேனை காவல் நிலையத்தின் சிறுகுற்றப்பிரிவுக்குப் பொறுப்பாக இருக்கின்ற காவல்துறை பொறுப்பதிகாரியிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.


அதில் 27ஆம் திகதி காலை 11 மணிக்கு சி.ஐ.டி யினர் உங்களை விசாரணை ஒன்றுக்காக மட்டக்களப்புககு வருமாறு அழைத்துள்ளார்கள், ஆகவே நீங்கள் அங்கு செல்ல வேண்டும் அதற்குரிய தகவலை நாம் நேரில் கொண்டுவருவோம் என அவர் தெரிவித்தார்.

அற்கிணங்க நேற்று மாலை இரண்டு காவல்துறை உத்திகோகஸ்த்தர்களால் சிவில் உடையில் வருகை தந்து எனக்கு அந்த விசாரணைக்குரிய அழைப்புக் கடிதத்தைக் கொண்டு வந்தார்கள்.


இன்று(27-01-2024)மட்டக்களப்பு சி.ஐ.டி.யினரால் விசாரணைக்காக நீங்கள் அழைக்கப்பட்டிருக்கின்றீர்கள். எனவே நீங்கள் அங்கு செல்ல வேண்டும் என அவர்கள் தெரிவித்தார்கள்.

காவல்துறையினரின் யுக்தி
அந்த அழைப்புக் கடிதம் சிங்களதிலே எழுதப்பட்டிருந்தது, எனக்கு சிங்களம் தெரியாது என நான் அந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களிடம் கூறினேன். நாங்கள் கடிதம் தந்துவிட்டோம் என தெரிவித்து விட்டுச் சென்றார்கள்.


எனவே கடந்த மாவீரர் தினத்திற்காக எனக்கு கொண்டுவரப்பட்ட தடை உத்தரவும், இரவு வேளையிலேதான காவல்துறையினரால் எனக்கு கொண்டு தரப்பட்டது.

அதுபோன்றுதான் இந்த கடிதமும் மாலை வேளையில்தான் காவல்துறையினர் கொண்டு வந்தார்கள். இது காவல்துறையினர் பயன்படுத்தும் ஒருவித யுக்கதியாகவே நான் கருதுகின்றேன்.


நான் சட்ட ஆலோசனைகளைப் பெறுவதற்கு முடியாத வகையில் சட்ட ஆலோசனைகளைத் தடுப்பதற்காகவுமே காவல்துறையினர் இவ்வாறு நடந்து கொள்கின்றார்கள், என கூறியுள்ளார்.
புதியது பழையவை