மட்டக்களப்பில் முதலைகளின் நடமாட்டம் அதிகரிப்பு!
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழை ஓய்ந்த நிலையில், நீர் நிலைகளை அண்டிய பகுதிகளில் முதலைகளின்
நடமாட்டம் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெல்லாவெளி, கோவில்பொரதீவு, பெரியபோரதீவு, பழுகாமம் உள்ளிட்ட பல பகுதிகளில் நீர் நிலைகளை அண்டி நடமாடிவரும் முதலைகள், மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகளை
பிடித்துச் செல்வதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு வாவியில் காணப்பட்ட முதலைகள், வெள்ள நீரோடு, சிறு குளங்களுக்கும் புகுந்துள்ளன.
எனவே மக்களை அவதானமாகச் செயற்படுமாறு விவசாய அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
புதியது பழையவை