டுபாய் நாட்டில் இலங்கையர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸாரால் தேடப்பட்டு வந்த 13 முக்கிய குற்றவாளிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்களில், பெலியத்தவில் ஐந்து பேர் கொல்லப்பட்டதற்கு ஆதரவளித்ததாகக் கூறப்படும் உரகஹா மைக்கல் என்பவரும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, பொரளை பிரதேசத்திலுள்ள முடிதிருத்தும் கடை ஒன்றில் சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் நபர் ஒருவரை சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
அந்த கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட தெமட்டகொட சமிந்த உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு ஒதுக்கப்பட்ட வழக்கில் பல வழக்குப் பொருட்கள் காணாமல் போதுள்ளது.
முறையான விசாரணை
இது தொடர்பில் உடனடியாக முறையான விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க, பொரளை பிரதேசத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள்ளார்.