மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்தில் 17 பேர் அதிபர் நியமனம்
மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்தில், அதிபர் வெற்றிடம் காணப்பட்ட 17 பாடசாலைகளுக்கு புதிய
அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய அதிபர்களை நியமிக்கும் நிகழ்வு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன்
தலைமையில் நேற்று நடைபெற்றது.

புதிய அதிபர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலை ஆரம்பமாகும் தினத்தில் இருந்து தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ளனர்.
புதியது பழையவை