இன்று திருமலைத்தியாகி நடராஜனின் 67, வது ஆண்டு நினைவு
வரலாற்றை ஒரு தடவை மீட்டுப்பார்பது தமிழ் இளைஞர்களின் கடமை..!

இலங்கைக்குக்கு சுதந்திரம் கிடைத்து 76, ஆண்டுகள்..!
தமிழினத்துக்கு கைவிலங்கு இடப்பட்டும் 76, ஆண்டுகள்..!

🇱🇰1948, பெப்ரவரி,04,ல் பிரித்தானியரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றநாளில் சிங்ககொடி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஏற்றப்பட்டது அதே நாள்
சுதந்திரதினம் தமிழினத்திக்கு கரிநாள் என முதல் முதல் தந்தை செல்வாவே கூறி தமது வாகனத்தில் சங்கிலியன் மன்னரின் நந்திக்கொடியை 1948, பெப்ரவரி, 04, ம் திகதி தமது வாகனத்தில் ஏற்றினார்..!

இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி1949, டிசம்பர்,18, ல் ஆரம்பித்த பின்னர் 1950, பெப்ரவரி,04, ல் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாள் என அறிவித்தது.. !

1956, ல் சிங்களம் மட்டும் சட்டம் அதிகாரபூர்வமாக 1956 ம் ஆண்டின் 33ம் இலக்க அரசகரும மொழிகள் சட்டம் என்பது எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க தலைமையிலான இலங்கை அரசாங்கத்தால் 1956 ஆம் ஆண்டு சூன் 5 ஆம் நாள் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட "சிங்களம் மட்டுமே இலங்கையின் அரசகரும மொழி" என்ற சட்டத்தைக் குறிக்கும். இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இலங்கையின் ஆட்சிமொழியான ஆங்கில மொழி அகற்றப்பட்டு 70% பெரும்பான்மை சிங்களவர்கள் பேசும் சிங்கள மொழி ஆட்சி மொழியாக்கப்பட்டது.

இதனை தந்தை செல்வா தலைமையில் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி தொடர் எதிர்பு போராட்டங்களை முன்எடுத்தது.

அதன் தொடராக 1957, பெப்ரவரி,04, ல் இலங்கை சுதந்திரதினத்தை கறுப்பு நாளாக வடகிழக்கு எங்கும் கறுப்பு கொடிகள் கட்டி எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றன.

04.02.1957 சிறிலங்காவின் ஒன்பதாம் சுதந்திர நாளன்று தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து தமிழர் தேசமெங்கும் சிறீலங்காவின் சுதந்திரதினத்தை தமிழர்கள் பகிஸ்கரித்தனர். திருமலையில் சிங்கக்கொடியை அகற்றி கறுப்புக் கொடியைக் கட்டமுயன்ற இனப்பற்றும் தேசப்பற்றும் நிரம்பிய 22 வயது தியாகி நடராஜன், எவ்.ஜி.மனுவல். டீ. சில்வா என்ற கோழைகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். 

அவர் தேசியக் கொடியுடன் மண்ணில் வீழ்ந்து மாய்ந்த நிகழ்வு அன்று வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தையே உலுக்கியது.
அகிம்சைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி நடராஜன் கொல்லப்பட்டபோது தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரனுக்கு அகவை 03.

1957, பெப்ரவரி 4,ம் திகதி இலங்கை சுதந்திரம் அடைந்து சரியாக ஒன்பதாவது ஆண்டில் முதல் விடுதலை உணர்வுடன் பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் பலியான திருகோணமலை மண் தந்த வீரப்புதல்வன் தியாகி நடராஜன் அவர்களை இன்று 76வது இலங்கை சுதந்திரம் அடைந்த தினத்தில் அன்னாரின் 67,வது ஆண்டு நினைவு நாள் என்பதை ஒவ்வொரு உணர்வுள்ள தமிழரும் ஒருகணம் நினைப்போம் அவரின் தியாகத்தை மதிப்போம்.!

-பா.அரியநேத்திரன்-
04/02/2024
புதியது பழையவை