மட்டக்களப்பில் சுதந்திர தினத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு தடை




மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கையின் சுதந்திரத்தினத்தை கருப்பு தினமாக அனுஷ்டிப்பதை தடுப்பதற்காக சிலருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த தடை உத்தரவு தொடர்பான அறிக்கையானது, நேற்று(03-02-2024) இரவு காவல்துறையினாரால் வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு சிறு சமூக உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் இவ்வாறான தடை உத்தரவுகளை இரவோடு இரவாக வீடுகளுக்கு சென்று காவல்துறையினர் வழங்கி வைத்துள்ளனர்.


தடை உத்தரவு

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு வெபர் மைதானம் காந்தி பூங்காவில் இடம்பெறவுள்ள நிகழ்ச்சிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு மட்டக்களப்பு நீதவான நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.


அத்துடன், மட்டக்களப்பு மாவட்ட தலைமை காவல்துறை அதகாரியினால் இது தொடர்பான அறிக்கை நீதிமன்றுக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை