மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!புப்புரஸ்ஸ - லெவலன்வத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் புப்புரஸ்ஸ - லெவலன்வத்தை பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய நபராவார்.

இவரது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் அருகில் உள்ள மற்றுமொரு வீட்டில் இருந்து மின்சாரம் பெற்றுக்கொள்ள முயன்ற போதே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புப்புரஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை