மட்டக்களப்பில் நாம் தமிழர் சமூக சேவை ஒன்றியத்தினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!கல்வியே எமது சமூகத்தின் காப்பரன் எனும் தெனிப்பொருலுக்கு அமைய நாம் தமிழர் சமூக சேவை ஒன்றியத்தினால் பல்வேறு உதவித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில். மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சங்கர்புரம் கிராமத்தில் பொருளாதார நலிவு நிலையில் கல்வி கற்று வரும் தெரிவு செய்யப்பட்ட நூற்று பத்தொன்பது (119) மாணவ செல்வங்களுக்கு கரிகாலன் அமைப்பின் நிதி அனுசரணையில் இன்று(07-02-2024)நாம் தமிழர் சமூக சேவை ஒன்றியத்தியத்தினால் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் நாம் தமிழர் சமூக சேவை ஒன்றியத்தின் செயலாளர் கோபாலன் பிரசாத், ஊடகச் செயலாளர் கருணராஜன், இணைப்பாளர் சுபேசன், மகளிர் அணி செயலாளர் கண்மணி உட்பட பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
புதியது பழையவை