மட்டக்களப்பு பேருந்து நிலைத்தின் பின்புறத்தில் ஆண் ஒருவரி சடலம் மீட்பு!



மட்டக்களப்பு தனியார் பேருந்து நிலையத்திற்கு பின்புறம் உள்ள பகுதியில் இன்று(28-02-2024)ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.


இன்று காலை குறித்த இடத்தில் காணப்பட்ட பை மற்றும் சடலத்தை அவதானித்த பொதுமக்கள் பொலீசாருக்கு தெரிவித்ததை அடுத்து குறித்த இடத்திற்கு பொலீசார் வருகை தந்தது விசாரணைகளை முன்னெடுத்தனர்.


அதனைத் தொடர்ந்து குற்றத் தடயவியல் பொலீசார் குறித்த இடத்திற்கு வருகை தந்து பிரதேத்தை பார்வையிட்டதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.

உயிரிழந்த நபர் 55 வயதுடைய புதிய காத்தான்குடி பகுதியைச் சேர்ந்தவர் எனவும் மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை எனவும் பொலீசார் தெரிவித்தனர்.


புதியது பழையவை