இறப்பதற்கு முன் தனது சகோதரனிடம் சாந்தன் கூறிய வார்த்தைகள்ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு பின், சிறையிலிருந்து விடுதலையான சாந்தன் தனது சகோதரனை சந்தித்த காணொளியொன்று தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இறப்பதற்கு முன் வைத்தியசாலையில் இருந்த போது தனது சகோதரனை ஆரத்தழுவி ஏக்கத்துடன் பார்க்கும் அந்த காணொளி பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்து புறப்படவிருந்த நிலையில் இன்று(28-02-2024) காலை சாந்தன் உயிரிழந்துள்ளார். 

உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
சாந்தனின் உடலுக்கு நளினி உள்ளிட்ட பலரும் அஞ்சலி


கடந்தவாரம் அவரது சகோதரர் அவரை வைத்தியசாலையில் பார்க்கச் சென்றபோது தனது சகோதரனின் கையைப் பிடித்துக் கொண்டு “என்னை விட்டு எங்கேயும் போகாதே” என கூறியுள்ளார்.
புதியது பழையவை