இலங்கையில் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சுகாதார மற்றும் மருத்துவமனைகளின் மருத்துவ அதிகாரிகளின் அலுவலகங்கள் மூலம் வழங்கப்படும், விட்டமின்களின் கடுமையான பற்றாக்குறை இன்னும் நிலவுவதாக தாய்மார்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நாட்டில பல மாதங்களாக தமக்கு கல்சியம் மாத்திரைகள் கிடைக்கவில்லை எனவும் தாய்மார்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மருந்துகள் பற்றாகுறை
இதன் காரணமாக, தாய்மார்கள் விட்டமின்கள், கல்சியம் மருந்துகளை வெளியில் கொள்வனவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதுதவிர, கர்ப்பப்பை, வாய்ப் புற்றுநோயைத் தடுக்க சிறுமிகளுக்கு வழங்கப்படும் HPV தடுப்பூசி ஒரு வருடமாகியும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.