கிளிநொச்சியில் பார ஊர்தி தடம் புரண்டு விபத்து
கிளிநொச்சி ஏ-35 வீதியின் பரந்தன் பகுதியில் பார ஊர்தியொன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

முல்லைத்தீவு பரந்தன் ஏ-35 வீதியின் பரந்தன் சந்திக்கு அன்மித்த பகுதியில் இன்று(23-02-2024) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


முல்லைத்தீவிலிருந்து பரந்தன் நோக்கி பயணித்த பார ஊர்தி ஒன்று உள்வீதியில் இருந்து பிரதான வீதிக்கு வேகமாக வந்தேறிய மோட்டார் சையிக்கிளுக்கு வழி விட முற்பட்ட வேலை குறித்த பார ஊர்தி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


மேலும், விபத்தில்பாதிப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும், விபத்து தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை