எதிர்வரும் திங்கட்கிழமை (05-02-2024) விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட மாட்டாது என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 76ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (04-02-2024) கொண்டாடப்படவுள்ளது.
இந்த நிலையில் அதற்கு மறுதினம் திங்கட்கிழமை விடுமுறை தினம் என தகவல்கள் பகிரப்பட்டு வந்தது.
அரச நிறுவனங்கள்
இந்த நிலையிலேயே குறித்த அறிவிப்பை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இன்று (02-02-2024) வெளியிட்டுள்ளார்.
இதன்படி, திங்கட்கிழமை அனைத்து அரச நிறுவனங்களும் வழமை போன்று இயங்கும் எனவும் யசரத்ன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.