நிகழ்நிலை காப்புச் சட்டம் - பேஸ்புக் நிறுவனம் இலங்கை மீது அதிருப்தி
இலங்கையில் நேற்று (01-02-2024)  முதல் நிகழ்நிலை காப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

பல தரப்பினரின் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த சட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது.

சுதந்திரமான கருத்துரிமைக்கும் புத்தாக்கத்துக்கும், தனியுரிமைக்கு இந்தச் சட்டம் இடையூறாக இருக்கும் என அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் கருத்து வெளியிட்ட இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங், இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டம் குறித்து அமெரிக்கா கவலையடைந்துள்ளது.


இந்த சட்டம் வெளிப்படைத்தன்மை இல்லாமல் தயாரிக்கப்பட்டுள்ளது. சட்டத்தின் உருவாக்கப் பணியில் சமூக ஆர்வலர்கள் அல்லது துறைசார் நிறுவனங்கள் மற்றும் பிரிதிநிதிகளின் பங்களிப்பு உருவாங்கப்படவில்லை.

70 வீதத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் இந்த சட்டம் பற்றி அறிந்திருக்கவில்லை.

கூகுள், மெட்டா, பேஸ்புக் போன்ற நிறுவனங்களை உள்ளடக்கிய கூட்டமைப்பு, இந்த சட்டம் அமுல்படுத்த முடியாத ஒரும் சட்டம் எனக் கூறியுள்ளன.


இணைய குற்றங்களைத் தடுப்பதற்குப் பதிலாக, இந்தச் சட்டத்தின் நோக்கம், ஜனநாயகக் கொள்கைகளுக்கு எதிரான படையெடுப்பாகவே கருத முடியும். என அவர் மேலும் கூறினார்.
புதியது பழையவை