பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிப்பு!



இலங்கையின் 36வது பொலிஸ் மா அதிபராக (IGP) தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்னகோன் 36ஆவது பொலிஸ் மா அதிபராக தனது நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளரிடமிருந்து திங்கட்கிழமை (26-02-2024) பெற்றுக்கொண்டார்.

தேசபந்து தென்னகோன் கடந்த வருடம்  நவம்பர் மாதம் 29 ஆம் திகதி பதில் பொலிஸ் மா அதிபராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை