மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஜோதிர்லிங்க கண்காட்சிக்கூடம் அங்குரார்ப்பணம்




பிரம்ம குமாரிகள் இராஜ யோக நிலைய ஏற்பாட்டில், சிவலிங்கம், நினைவுக்கல், ஜோதிர்லிங்க கண்காட்சிக்கூடம், படவிளக்க கண்காட்சிக் கூடம், முரளி மண்டபம் ஆகியவற்றை, பிரம்ம குமார் தெய்வீக சகோதரர் சார்லி, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர் இணைந்து கொக்கட்டிச்சோலை அரசடித்தீவு பிரம்ம குமாரிகள் இராஜ யோக நிலைய வளாகத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர்.

நாதஸ்வர மேள வாத்தியத்துடன், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், தெய்வீக சகோதரர் சார்லி ஆகியோரை வரவேற்றதைத் தொடர்ந்து ஆரம்பமானது.

சகோதரர் கணேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வின் சிறப்பம்சமாக அவுஸ்திரேலியாவை சேர்ந்த பிரம்ம குமார் தெய்வீக சகோதரர் சார்லி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் கௌரவிக்கப்பட்டார்.









புதியது பழையவை