இ.போ.ச பேருந்து சாரதி - நடத்துனரால் பெண்ணுக்கு நேர்ந்த நிலை!




திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பெண்ணை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சாரதியும், நடத்துநரும் இடைநடுவில் இறக்கி விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


குறித்த சம்பவம்  (18-02-2024) குறித்த பெண் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது சாரதி பேருந்தினை மிகவும் வேகமாக செலுத்தியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த குறித்த பெண் உயிர் அச்சத்தால், பேருந்தை அளவான வேகத்தில் செலுத்துமாறு கேட்டுக் கொண்டார்.


ஆனால், அந்த சாரதி அவ்வாறு மெதுவாக செலுத்த முடியாது என்றும், அந்த பெண்ணை கீழே இறங்குமாறும் வற்புறுத்தினார்.


பின்னர் சாரதியும் நடத்துநரும் இணைந்து அந்த பெண்ணை இடையில் இறக்கி விட்டனர்.

இலங்கையில் சமீபக் காலமாக பேருந்து விபத்துக்கள் அதிகரித்துவரும் நிலையில் பேருந்தில் பயணிக்கும் பயணிகள் உயிரை கையில் பிடித்தவாறே பயணம் செய்கின்றனர்.


எனினும், பேருந்து சாரதிகள் அவற்றினை எல்லாம் பொருட்படுத்தாது தமது மேலதிக கொடுப்பனவுக்காகவும், அதிக வருமானத்தை பெறும் நோக்கிலும் செயற்பட்டு வருகின்றனர்.

குறித்த பெண்ணுக்கு இ.போ.ச பேருந்து சாரதி மற்றும் நடத்துனரால் இழைக்கப்பட்ட அநீதியானது மிகவும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதியது பழையவை