தேர்தலுக்கு முன் தேசிய அரசாங்கம் - ஜனாதிபதி ரணில்




எதிர்வரும் தேர்தல்களுக்கு முன்னதாக தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கொழும்பில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரின் இல்லத்தில் நள்ளிரவு தாண்டிய நிலையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

அமைச்சரவை விரிவாக்கம்
ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய அரசியல்வாதிகள் பத்துக்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டுள்ளதோடு, சிறுபான்மைக் கட்சியொன்றின் தலைவரும் அவர்களில் உள்ளடங்குவதாக தெரிய வந்துள்ளது.


ஏப்ரல் மாதத்துக்குள் தேசிய அரசாங்கமொன்றை தாபித்து, அமைச்சரவையை விரிவாக்கம் செய்வது குறித்து இதன் போது விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதியது பழையவை