நாட்டில் நாளாந்தம் சராசரியாக 106 புதிய புற்றுநோயாளிகள் கண்டறியப்படுகின்றனர் என புற்றுநோய் நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
உலக புற்றுநோய் தினமான நேற்று அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தில் மாத்திரம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கடந்த 3 தசாப்தங்களில் உலகெங்கிலும் 50 வயதுக்கு உட்பட்டவர்களிடையே புதிதாகப் பதிவாகியுள்ள புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 80 சதவீதம் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.