வாகனம் ரயிலுடன் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு!யாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் புகையிரதமும், கயஸ் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

அனுராதபுரத்தில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச்சென்ற புகையிரதத்துடன் ஹயஸ் வாகனம் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விபத்தில் சிக்கிகியுள்ளனர். 

அதில் 6 மாத குழந்தை ஒன்றும் உள்ளடங்கியுள்ளது.

இதில் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாகனத்திற்குள் இருந்தவர்கள் பெயர் விபரங்கள் என்னும் வெளியாகவில்லை.

மேலதிக விசாரணைகளை இணுவில் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர.
புதியது பழையவை